கொங்கு நாடு தலைநகரா எது கொண்டு வரலாம் - நெட்டிசன்கள் கருத்துக்கணிப்பு

கொங்கு நாடு

திமுக, பாஜக-வை கலாய்த்தும் சில பதிவுகள் ட்விட்டரில் வலம் வருகின்றன.

  • Share this:
    கொங்கு நாடு காலையில இருந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த கொங்கு நாடு விவகாரம் அரசியலில் கொஞ்சம் அனலை கிளப்பியுள்ளது. காலையில் இருந்து ட்விட்டரில் கொங்கு மண்டலம் குறித்த பெருமைகளும் இதுதொடர்பான பதிவுகளை அதிகம் காண முடிகிறது.

    “இல்லாத ஒன்ன மாநிலமா உருவாக்கவும் தெரியும். இருக்கிற மாநிலத்த இல்லாம ஆக்கவும் தெரியும்..” என திடீர்ன்னு தனிஒருவன் சித்தார்த் அபிமன்யூ ரேஞ்சுக்கு ட்வீட்டரில் ட்வீட்கள் பறக்குது. நெட்டிசன்களின் விருந்து வைத்துள்ளது ‘கொங்கு நாடு’டாப்பிக். தினமலர் நாளிதழில் ஒரு செய்தி தமிழகத்தில் இருந்து கொங்கு நாடு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்போறங்க.

    Also Read:Kongu Nadu: கொங்கு நாடு பகுதியை தமிழ்நாட்டில் இருந்து தனியாக பிரிக்க முடியுமா?

    தமிழகத்தை ஆளக்கூடிய தி.மு.க அரசு மத்திய அரசை மதிக்கிறதே இல்ல ஒன்றிய அரசுன்னு கூப்பிடுது.. சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் குறித்து கொங்கு ஈஸ்வரன் பேசுனதுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதியா இருந்துட்டார் அதனால கோபமா இருக்கிற மத்திய அரசு தமிழ்நாட்டுல இருந்து ‘கொங்கு நாடு’ பிரிக்கப்போவுது. அதுக்கு அச்சாரம்தான் மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பயோவில் கொங்கு நாடு எனப் போட்டிருக்குன்னு. வானதி சீனிவாசன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரானது அண்ணாமலை தமிழக பாஜக தலைவரானது எல்லாமே ‘கொங்கு நாடு’ மைண்ட்ல வச்சுதான் ஒரு செய்தி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காலையில் இருந்து கொங்கு டா.. என நெட்டிசன்கள் ஃபயர் விடத் தொடங்கியுள்ளனர். ‘கொங்கு நாடு’-க்கு தலைநகரா எதை கொண்டு வரலாம் ஒரு கருத்துக்கணிப்பு வேற நெட்டிசன்கள் நடத்திக்கிட்டு இருக்காங்க. கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு-ன்னு லிஸ்ட் போட்டு வாக்கெடுப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க. இதுல கோவைக்கே இப்போது முதலிடம்.



    இல்லாத ஒன்ன மாநிலமா உருவாக்கவும் தெரியும். இருக்கிற மாநிலத்த இல்லாம ஆக்கவும் தெரியும்.. என்கிற ரீதியில் சில ட்வீட்கள். திமுக, பாஜக-வை கலாய்த்தும் சில பதிவுகள் ட்விட்டரில் வலம் வருகின்றன.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: