• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒயிட் போர்டில் ஃப்ரி.. மினி பஸ்சில் இவ்வளவு கட்டணமா? - ஷாக் ஆகும் பெண்கள்

ஒயிட் போர்டில் ஃப்ரி.. மினி பஸ்சில் இவ்வளவு கட்டணமா? - ஷாக் ஆகும் பெண்கள்

நகர பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள்

நகர பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட நகர மினி பேருந்துகளில் 13 ரூபாய் வரை முதியோர்கள் மற்றும் பெண்களிடம் டிக்கெட் வசூல்.

  • Share this:
    சென்னை மாநகர ஒயிட் போர்டு பேருந்தில் மட்டும் தான் பெண்களுக்கு இலவசமா நகர மினி பேருந்தில் கிடையாதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மினி பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் முதியோர்களுக்கு 13 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் இன்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் 50% வரை பயணிகள் பயணிக்கலாம் என அரசு தளர்வு கொடுத்துள்ளது அதிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ஏற்கனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பின்படி இன்று சென்னை முழுவதும் இலவச பயணம் செய்து வரும் நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள தெருக்களில் பயணம் செய்யும் மினி பேருந்துகளில் டிக்கெட் வசூலிக்கப்படுவதால் பெண்கள் முதியோர்கள் இதனால் வேதனை அடைந்துள்ளார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கோயம்பேடு மார்க்கெட் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ விற்பனை பழ விற்பனை செய்யும் முதியோர்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்

    வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி குப்பத்திலிருந்து கோயம்பேடு பகுதிக்கு மினி பேருந்தில் பயணித்த மூதாட்டி கன்னியம்மாள் என்பவரிடம் 13 ரூபாய் டிக்கெட் வசூல் செய்யப் பட்டதை மிகவும் வேதனையாக தெரிவித்தார்.ஒயிட்போர்டு பேருந்துகளில் மட்டும் இலவசமாக பெண்கள் முதியோர்கள் பயணிக்கும் நிலையில் மினி பேருந்துகளிலும் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    அம்பத்தூர் செய்தியாளர்: கன்னியப்பன்


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: