• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA மறுபரிசீலனைக்கு வாய்ப்பு இல்லை - இல.கணேசன் கருத்து

CAA மறுபரிசீலனைக்கு வாய்ப்பு இல்லை - இல.கணேசன் கருத்து

  • Share this:
    குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

    பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தில், அக்கட்சி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் பேசிய அவர், தமிழக பாஜக தலைவரை ஒருமித்த கருத்தோடு தேர்வு செய்வோம் எனவும் இது தொடர்பான அறிவிப்பை பாஜக மேலிடம் ஒரு வாரத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி திமுக மக்களிடையே அவதூறு பரப்பி, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக இல.கணேசன் குற்றம் சாட்டினார். முதல்வராக வேண்டுமென்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாததால், திமுகவினர் இவ்வாறு செய்வதாக சாடினார்.

    தொடர்ந்து பேசிய அவர், ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவ்வாறு செய்வது தேவையற்றது” எனவும் குறிப்பிட்டார். இஸ்லாம் மதத்தில் உள்ள பெரியவர்கள் இச்சட்டம் தொடர்பாக இளைஞர்களுக்கு எடுத்துரைத்து, அறிவுரை கூற வேண்டும் எனவும் இல.கணேசன் கேட்டுக் கொண்டார்.

    பாகிஸ்தானை விட இந்தியாவில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும், இருப்பினும் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் யாராவது ஒருவர் உயர் பதவிக்கு வர முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், இந்தியாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கினார் என இல.கணேசன் தெரிவித்தார்.

    Also see:

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: