தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam), டி.என்.பி.எஸ் சி - ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு (TNPSC Group 2 Exam) விண்ணப்பிக்க இன்று கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Minister Palanivel Thiagarajan), ஒரே விண்ணப்பதாரர் 2 முறை விண்ணப்பிக்க கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது 2020-இல் கொண்டு வரப்பட்டது. எனவே விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க முடியாது. இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வேறு வகையில் சரி செய்ய முடியுமா என்று தேர்வு ஆணையத்தில் ஆலோசித்து அடுத்த தேர்வுக்கு முன்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
Also Read : ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் சொல்ல மறுப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இதில்,குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Assembly, TNPSC