மதுரைக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மதுரையில் சாதி, மதபேதமில்லாமல் சித்திரைத் திருவிழாவை மக்கள் கொண்டாடிவருகிறார்கள். வரும் ஏப்ரல் 15-ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.
16-ம் தேதி அம்மன் திக் விஜயம், 17-ம் தேதி திருக்கல்யாணம், 18-ம் தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகருக்கு எதிர் சேவை, 19-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
எனவே, மதுரையில் மட்டும் மக்களவைத் தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் பாதுகாப்பு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லவேண்டும். மதுரையைப் போல இந்தியா முழுவதும் தேர்தல் தேதியை மாற்றிவைக்கக் கோரினால் என்ன செய்ய முடியும். தேர்தல் நேரத்தை இரண்டு மணி நேரம் அதிகப்படுத்த முடியும். மதுரைக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க முடியாது’என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எத்தனை உயரதிகாரிகள் விடுமுறை எடுத்து திருவிழாவுக்கு வருவார்கள் என்று தெரியுமா? மதுரை சித்திரைத் திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள்.
தேரோடும் வீதியில் மட்டும் 51 வாக்குச் சாவடிகள் உள்ளன. களநிலவரம் தெரியாமல் எதுவும் பேசாதீர்கள். நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதுதான் இறுதியா? தமிழகம் முழுவதும் ஏன் தேர்தல் தேதியை மாற்றக் கூடாது? இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இதுதொடர்பாக, நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, Madurai