முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "கர்நாடக காங்கிரஸ் தலைவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது"- தமிழக காங். பிரமுகர் காட்டம்!

"கர்நாடக காங்கிரஸ் தலைவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது"- தமிழக காங். பிரமுகர் காட்டம்!

பீட்டர் அல்போன்ஸ் - டி.கே.சிவக்குமார்

பீட்டர் அல்போன்ஸ் - டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவகுமார் சொல்வது இயற்கை நீதிக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார் பீ.ட்டர் அல்போன்ஸ்

  • 1-MIN READ
  • Last Updated :

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு- கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு இடையே இருகருத்து மோதல்கள் எழுந்துள்ளன.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சிவகுமார், தனது ட்விட்டர் பதிவில், "ஒரு மாநிலம் தனது வடிகால் நிலப்பகுதிக்குள் தனது திட்டங்களை அமைத்துக்கொள்ள, இதர ஆற்றுப்படுகை மாநிலத்திடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்பதை உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தெளிவாக கூறியுள்ளது. இந்நிலையில், மேகதாது அணைக்கு கர்நாடக முதல்வர் தமிழ்நாடு முதல்வரிடம் அனுமதி கோருவது மூர்க்கத்தனமாக உள்ளது. இது, தெளிவாக எடியூரப்பாவின் அரசியல் விருப்பமின்மையை பிரதிபலிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மேகதாது திட்டப் பணிகளுக்கான டெண்டர் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் இறுதி செய்யப்பட்டன. தற்போதைய முதல்வர், அதை ஏன் தொடரக்கூடாது. அறியாமையில் இருப்பது வேறு, ஆனால், நோக்கமே இல்லை என்பது வேறு" என்று பதிவிட்டார்.

Also Read:  ஒன்றிய அரசு என அழைப்பதால் எந்த பயனும் இல்லை, பாமக மத்திய அரசு என்று தான் அழைக்கும் - அன்புமணி ராமதாஸ்

சிவகுமாரின் இந்த கருத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகியும், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " உங்களின் இந்த நிலைப்பாடு இயற்கை நீதிக்கும், இருதரப்பு மாநில உறவுகளுக்கு எதிரானது. கீழ் ஆற்றுப்படுகை நிலப்பரப்புகள் சட்டரீதியாக பாதுகாக்கப்பட்டவை. ஒருவேளை, உங்கள் நிலைப்பாடு சரியாக இருந்தால் சீனா, வங்கதேசம், திபெத், நேபால் போன்றவைகளுடன் இந்தியா நதிநீர் பங்கீடு செய்து கொள்ள முடியாது" என்று பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ்  நியூஸ்18தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் கூறியிருக்கிறார். மாநிலம் விட்டு மாநிலம் பாயக்கூடிய நதிகளை பொருத்தவரை விரிவான சட்ட நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் வகுத்துக் கொடுத்திருக்கிறது. கீழ் பாசனதாரர்கள் உரிமையை பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் நல்ல பாதுகாப்பைத் தருகின்றன. ஒரு நதியின் ஓட்டத்தில், நதி செல்லும் பாதையில் கடலில் கலக்கும் வரை ஒவ்வொரு நிலத்திற்கும் நீரின் மீது உரிமை இருக்கிறது. சிவகுமார் சொல்வது இயற்கை நீதிக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

Also Read:  100 ஏக்கரில் தொழில் நகரம்.. ஒரு லட்சம் பேருக்கு வேலை: புதுச்சேரி அரசு

மேலும், காவிரி பிரச்சினை அரசியல் கட்சி சார்ந்த பிரச்சினை இல்லை. காவிரி பிரச்சனை தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை. இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் எந்த அரசியல் கட்சிக்கும் தனிப்பட்ட நிலைப்பாடு கிடையாது. தமிழர்களுக்கான வாழ்வாதாரம் என்ற ஒரே நிலைப்பாடுதான். முதல்வர் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அனைவரும் ஒரே குரலாக நிற்க வேண்டும். இதை வேறு எந்த கோணத்திலும் அணுகுவது சரியாக இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த முறை காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது, கர்நாடகாவில் இருந்த அதிமுக கிளை, கர்நாடக அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் போட்டது. அங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் மாநிலத்தை எதிர்த்து செயல்பட முடியாது. அதே போல தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் தமிழக நலனுக்கு எதிராக செயல்பட முடியாது," என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: DK Shivakumar