ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“கூட்டணிதான்.. அதுக்காக எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது” - பாஜக தலைவர் அண்ணாமலை

“கூட்டணிதான்.. அதுக்காக எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது” - பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை, ஈபிஎஸ்

அண்ணாமலை, ஈபிஎஸ்

அமித்ஷா வரும்பொழுது எல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக தெரிவித்திருந்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த நிலையில் அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தனித்துப் போட்டி என்ற கருத்தையும் தெரிவித்தார்.

  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்தார்.

  இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த பொழுது அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல் தவிர்த்ததாகவும், மாறாக ஓ பன்னீர்செல்வம் மட்டும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது.

  அமித்ஷா வரும்பொழுது எல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக தெரிவித்திருந்தார்.

  இதுவும் பாஜக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது

  இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதலளித்த அண்ணாமலை அது குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும் என தனது கருத்தை மாற்றிக் கூறியுள்ளார்.

  ''நம் கட்சிக்குள் சனாதனம்" மேடையில் படாரென பேசிய விசிக பெண் நிர்வாகி... ஷாக்கான திருமா.. மைக்கை ஆஃப் செய்த நிர்வாகி!

  கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

  தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துள்ளதாகவும் , கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கின்றன, இத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்று மாநில தலைவராக தான் சில கருத்துக்களை முன்வைப்பேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் வளர்ச்சி என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: ADMK, Annamalai, BJP, EPS