திடீர் ஸ்டிரைக்: கேன் வாட்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தப்படும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திடீர் ஸ்டிரைக்: கேன் வாட்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 16, 2018, 6:21 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் உள்ள 300 கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்கள் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளதால், கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள், நிலத்தடி நீரை எடுப்பதற்கு அரசிடம் தடை இல்லா சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை த்விதித்து தமிழக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து 75 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அந்த மனுவுக்கு பதில் அளித்த தமிழக அரசு, வர்த்தக நோக்கத்திற்காக நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்கள் உறிஞ்சுவதை தடை செய்யவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறியது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வருங்கால சமுதாயத்துக்கு தேவையான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என கூறி, தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேசிய குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் முரளி, “குடிநீர் தேவைக்காக மட்டும் நிலத்தடி நீரை எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற ஆணையை திரும்பப் பெறாவிட்டால் எங்களால் குடிநீர் விற்பனையை செய்ய முடியாது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தான் நிலத்தடி நீரை எடுக்கிறோம். உயர் நீதிமன்ற ஆணைய திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் நிறுவனங்களின் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தப்படும். 300 குடிநீர் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்துகின்றன” என தெரிவித்தார்.

இதனால், கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
First published: October 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading