• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’கஞ்சா, சரக்கு தேவைக்கு...’ மானாமதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்

’கஞ்சா, சரக்கு தேவைக்கு...’ மானாமதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்

ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

மானாமதுரையில் போலீஸ் பயமில்லாமல் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் கஞ்சா மற்றும் சரக்கு விற்பனைக்கு விளம்பரம் செய்திருப்பது அந்தப் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
மானாமதுரையில் போலீஸ் பயமில்லாமல் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் கஞ்சா மற்றும் சரக்கு விற்பனைக்கு விளம்பரம் செய்திருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை காந்தி சிலை பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள நிழற்குடையின் சுவற்றில் காலை ஒரு நோட்டீசில் கஞ்சா மற்றும் சரக்கு தேவைக்கு என 2 அலைபேசி எண்களை எழுதி யாரோ விஷமிகள் யாருக்கும் தெரியாமல் ஒட்டிச் சென்றனர்.




படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து


படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு










இதனைப் பார்த்த பொது மக்களும், போலீசாரும் அதிர்ச்சியடைந்து அதனைக்  கிழித்தெறிந்தனர். பின்னர் போலீசார் அதில் உள்ள அலைபேசியைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் எங்களுக்குப் பிடிக்காத யாரோதான் இந்த வேலையைச் செய்துள்ளனர் என்று கூறினர்.

இதனையடுத்து மானாமதுரை போலீசார் ஒட்டிய நபர்களைக் கண்டறிய விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் காந்தி சிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: