• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செல்லப்பிராணிகளுக்கு பரவும் பார்வோ வைரஸ்: கூடுதல் கவனம் செலுத்த கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

செல்லப்பிராணிகளுக்கு பரவும் பார்வோ வைரஸ்: கூடுதல் கவனம் செலுத்த கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

கோப்பு படம்

கோப்பு படம்

நோய் பாதித்த நாய்கள் வழியாக மற்ற நாய்களுக்கும் பரவும் இந்த தொற்றுநோயானது மனிதர்களுக்கு பரவாது என்றாலும், ஒட்டுமொத்த செல்லப் பிராணிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
உலகையே அச்சுறுத்தும் கொரோனோ நோய் தொற்று பல விலங்கினங்களுக்கும் கண்டறியப்பட்ட நிலையில் பெருந்தொற்று கொடுஞ்சவாலாக மாறிபோனது. இந்நிலையில், மற்றுமொரு சவாலாக அண்மைக் காலங்களில் செல்லப்பிராணிகளுக்கு பார்வோ எனும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

செல்லப் பிராணிகளில் ஒன்றான வளர்ப்பு நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக ஏற்படும் இந்த வைரஸ் பாதிப்புகள் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் அதிகம் கண்டறியப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நோய் பாதித்த நாய்கள் வழியாக மற்ற நாய்களுக்கும் பரவும் இந்த தொற்றுநோயானது மனிதர்களுக்கு பரவாது என்றாலும், ஒட்டுமொத்த செல்லப் பிராணிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாய்களுக்கு கண்டறியப்படும் இந்த வைரஸ் தொற்று நாய்களுக்கு வாந்தி, துர்நாற்றத்துடன் கூடிய ரத்தம் கலந்த பேதி, உணவு ஒவ்வாமை , காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.

"பார்வோ' எனும் வைரஸ் கிருமியால் நாய்களுக்கு காற்றின் வழியே பரவும் இந்த வைரஸ் பாதிப்புகள் பாதித்த நாய்களிடம் இருந்து மற்ற நாய்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தாத நிலையில் பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்டு  திடீர் உயிரிழப்புகளும் ஏற்படும் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

Also read:  ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்... ஆடி ஆஃபர் அறிவித்த இறைச்சி கடை

எனவே, நோய் பாதிக்கபட்ட சம்பந்தப்பட்ட நாயினை மற்ற நாய்களிடமிருந்து பிரித்து தனியாக வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாயின் மலத்தினை சுத்தமாக அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாய்க்கு உணவு, தண்ணீர் அளிக்க பயன்படுத்திய தட்டுகளை, மற்ற ஆரோக்கியமான நாய்களுக்கு உணவு வைக்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் மருத்துவர்களால் முன்வைக்கப்படுகிறது.

நாய் வளர்ப்போர் தடுப்பூசியினை நாய்க்குட்டிகளின் ஆறாம் வாரம் முதல் ஒன்பதாம் வாரம் வரையிலும், ஓராண்டுக்கு பின்பும் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி நாய்களுக்கு போட்டுக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கொரனோ அசாதாரண காலகட்டத்தில் வளர்ப்பு பிராணிகள் மீதான பராமரிப்பு வெகுவாக குறைந்து நிலையில் இது போன்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவதாக கூறும் மருத்துவர்கள்   நாய்களுக்கான தடுப்பூசி செலுத்துவதுவதிலும் உரிமையாளர்கள் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களை மனித சமுதாயம் கண்டாலும் நம்மை நம்பியுள்ள செல்லப் பிராணிகள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: