காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா - வேட்பாளர்கள் அடுத்தடுத்து புகார்...!

காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா - வேட்பாளர்கள் அடுத்தடுத்து புகார்...!

வேட்பாளர்கள் புகார்

திருச்சி மேற்கு திமுக வேட்பாளர் கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் வினோத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருச்சியில் காவல் நிலையத்தில் பணப்பட்டுவாடா நடைபெற்றது குறித்து வேட்பாளர்கள் அடுத்தடுத்து புகார் அளித்து வருகின்றனர்.

திருச்சி மேற்குத் தொகுதியில் காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா  குறித்து சிபிசிஜடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் வினோத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளர் கிஷோர் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள புகாரில், காவல் நிலையத்திலேயே பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது, தேர்தல் நேர்மையாக நடக்குமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திருச்சி மேற்கு தொகுதி தேர்தலை நிறுத்தி வைத்து, உரிய இடைவெளி விட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்யக்கோரி  மாவட்ட வருவாய் அலுவரிடம் புகார் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், பணப்பட்டுவாடா விவகாரத்தில் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுக வக்கீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக வேட்பாளர் கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்து விட்டு, திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பத்மாநாதன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், காவல் நிலைய பணப்பட்டுவாடாவில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. தேர்தலை நிறுத்த வேண்டும். என்னுடைய பெயருக்கு களங்கம் கற்பிக்க வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Also read... தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி...!

காவல் நிலையத்தில் பணப்பட்டுவாடா குறித்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள், பொது மற்றும் செலவினப் பார்வையாளர்கள், மாநகர காவல் ஆணையர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் /தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்சினி தலைமையில் ஆலோசனைக் நடைபெற்றது.

மாநகரில் காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா, மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முசிறி எம்.எல்.ஏ மற்றும் அதிமுக வேட்பாளர் செல்வராஜ் காரிலிருந்து ₹ 1 கோடி பறிமுதல்.
நேற்று இரவு மணப்பாறை எம்.எல்.ஏ மற்றும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன் நிறுவன ஊழியர் வீட்டிலிருந்து ₹ 1 கோடி என இது வரை மொத்தம் ₹ 3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: