Home /News /tamil-nadu /

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ’பரிசுப் பொருள்’ வாங்க குவிந்த வேட்பாளர்கள்!

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ’பரிசுப் பொருள்’ வாங்க குவிந்த வேட்பாளர்கள்!

பரிசு பொருட்கள் வாங்க குவிந்த வேட்பாளர்கள்

பரிசு பொருட்கள் வாங்க குவிந்த வேட்பாளர்கள்

  • News18
  • Last Updated :
    வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகிகம் செய்ய வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பொருட்களை வாங்க கடைகளில் குவிந்ததால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஊரக உள்ளாட்சி தேர்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

    இந்நிலையில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகம் செய்து வருகின்றனர்.

    பித்தளை குடம், பித்தளை தவளை உள்ளிட்ட பித்தளை பொருட்ள் மற்றும் சில்வர் குடம், டிபன் பாக்ஸ் போன்றவற்றை பரிசு பொருட்களாக வழங்கி வருகின்றனர்.

    அவ்வாறு திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையிலுள்ள பல கடைகளில் பாத்திரங்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    அந்த மொத்த வியாபாரம் செய்யும் கடைகளில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஒரே நேரத்தில் பாத்திரம் வாங்க குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

     

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Local Body Election 2019

    அடுத்த செய்தி