Home /News /tamil-nadu /

வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயத்தை கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்!!

வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயத்தை கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்!!

வாக்காளர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்களை மணிமேகலை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்களை மணிமேகலை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்களை மணிமேகலை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயத்தை கொடுத்து வாக்கு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த வார்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுக-வைச் சேர்ந்த மணிமேகலை துரைப்பாண்டி, சுயேச்சையாக போட்டியிட்டார்.

    இந்த வார்டில் 3 ஆயிரத்து 304 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆயிரத்து 950 வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வாக்காளர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்களை மணிமேகலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதனை அடகு வைக்க சென்றபோது, போலியானது என தெரியவந்தது. ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயங்களை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, 36-வது வார்டுக்கு மறு தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள்!!

    இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சர்ச்சைக்குள்ளான வேட்பாளர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அமர் குஷ்வாஹா-விடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்து காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறையினரின் அறிக்கை வந்தபின்னர், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என்றும் கூறினார்.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போலி தங்கக்காசு வழங்கியதாக வேட்பாளர் மீது எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த வார்டுக்கு நடைபெற்ற தேர்தல் ரத்துசெய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி