முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தான் தேர்வு செய்ய வேண்டும்... ஒபிஎஸ் தரப்பும் இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தான் தேர்வு செய்ய வேண்டும்... ஒபிஎஸ் தரப்பும் இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

பொதுக்குழு முடிவுகளை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரவிக்க வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் இபிஎஸ் தரப்பின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற விசாரணை செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதனிடையே ஈரோடு இடைத்தேர்தலை காரணம் காட்டி ஈபிஎஸ் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இந்த மனு மீதான இரு தரப்பினரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்யும். வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொக்குழுவில் வாக்கு எடுப்பு நடைபெற வேண்டும்.

பொதுக்குழு முடிவுகளை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரவிக்க வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

First published:

Tags: ADMK