Home /News /tamil-nadu /

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது: எடப்பாடி பழனிசாமி

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிபழனிசாமி

எடப்பாடிபழனிசாமி

அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் உள்பட பிரபலங்கள் யாரும் துணை போகக்கூடாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, திமுக ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் சொத்துகளை இழந்து இன்னுயிரையும் இழந்துவிட்டனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் உள்பட பிரபலங்கள் யாரும் துணை போகக்கூடாது. அரசும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை தடுக்க பல முறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்
என்றார்.

ஏழை குழந்தைகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகளில்  கொண்டுவரப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

Also Read : சென்னையில் முன்னறிவிப்பின்றி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

அதிமுக தலைமை சசிகலாவிற்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  இந்தக்கேள்வி  கற்பனையானது, அவர் கட்சியிலேயே இல்லை என்றார். அவர் கட்சியிலேயே இல்லை. கட்சியிலேயே இல்லாத சசிகலா குறித்து ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவதாகவும், எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கந்துவட்டி மிகப்பெரிய கொடுமை; காவல்துறையை சேர்ந்த ஒருவரே அதனால் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,
அரசு கந்துவட்டியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியை தவிர்த்து எல்லாமே எதிர்க்கட்சிதான் ; அதில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக என்றார்.

மேலும், விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக என்பதை கரூர் சாலை அமைக்காமலே ஊழல் செய்து  மீண்டும் ஒருமுறை  நிரூபித்துள்ளது என்றும் விமர்சித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பது தேவையற்றது என்றும் பருவகாலத்தை வைத்தே தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கூறிய அவர் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்தேன். அதே நேரத்தில் முன் கூட்டியே திறந்ததால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களை ஒட்டுமொத்தமாக கலைப்பது நியாயமல்ல என்ற கருத்தையும் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: ADMK, Edappadi palanisamy, Online rummy

அடுத்த செய்தி