புதியதாக வாங்கும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை
சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கான காப்பீடு செய்வது, செப்டம்பர் 1 முதல் கட்டாயம் என சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையேற்று போக்குவரத்துத்துறையும் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், பொதுக்காப்பீட்டு மன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனங்கள் செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Also Read : தமிழகத்தில் நடுநிலை பள்ளிகள் அடுத்த வாரம் திறப்பு - தகவல்
உரிய ஒப்புதல் பெற்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, மென்பொருளில் மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசமும் கோரப்பட்டு இருந்தது. இதையேற்ற நீதிபதி வைத்தியநாதன், அனைத்து வாகனங்களுக்கும் உடனடியாக பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பபெறுவதாக அறிவித்தார்.
பயணிகள் பாதுகாப்பை கருதி விபத்து இழப்பீட்டில் மத்திய அரசு உரிய திருத்தங்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன், தமிழக அரசின் போக்குவரத்துதுறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.