• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசியல் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அரசியல் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

  • Share this:
    அரசியல் பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுகளுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விஜயதாரணி, மார்கசிஸ்ட் கம்னியூஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், கே.என். நேரு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர.பார்த்திபன் மற்றும் திமுக தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

    அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: