சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ’இயல் விருது’ அறிவிப்பு...!

சு.வெங்கடேசன், எம்.பி.

  • News18
  • Last Updated :
  • Share this:
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது மதுரை எம்.பி மற்றும் எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ் மொழிக்கு அளப்பரிய சேவையாற்றிய எழுத்தாளர்களுக்கு 'இயல்' எனும் பெயரில் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

இதற்கு முன் எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், ஐராவதம் மகாதேவன், எஸ் ராமகிருஷ்ணன் இமையம் ஆகியோர் இவ்விருதை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த 2019-ம் ஆண்டிற்கான இயல் விருது தமிழ் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேடைகளில் தமிழின் மேன்மையை பரப்பியும், தமிழின் தொன்மை பற்றியும், கீழடி ஆய்வு தரவுகளின் தாக்கம் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு சொற்பொழிவுகள் ஆற்றிவரும் எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கு இயல் விருது வழங்குவதில் பெருமை கொள்வதாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது.

சு.வெங்கடேசன் இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. இயல் விருது வழங்கும் விழா கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் வரும் ஜூன் மாதம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankar
First published: