• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இன்று சிக்குமா T-23 புலி? 14ஆவது நாளாக தொடரும் தேடுதல் பணி

இன்று சிக்குமா T-23 புலி? 14ஆவது நாளாக தொடரும் தேடுதல் பணி

புலி - மாதிரிப்படம்

புலி - மாதிரிப்படம்

T-23 புலி பதுங்கியுள்ள இடத்தை சுற்றி கூடுதலாக 20 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியுள்ள T-23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் 14-வது நாளாக தொடர்கின்றனர். புலி பதுங்கியுள்ள இடத்தை சுற்றி கூடுதலாக 20 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புலி பிடிபடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4 வனகால்நடை மருத்துவகுழு மற்றும் 50க்கு மேற்ப்பட்ட வனத்துறையினர் சிங்காரா மற்றும் மசினகுடி வனப்பகுதியில் T23 என்னும் புலியை தேடும் பணியை நடத்தி வருகின்றனர். நேற்று முழுவதும் சிங்காரா வனப்பகுதியில் மூங்கில் புதர் பகுதியில் பதுங்கி இருந்த புலி இன்று வெளியே வர வாய்ப்பு உள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் 4 இடங்களில் பரண் அமைத்துள்ளனர்.

    பரண் மீது அமர்ந்துள்ள வன கால்நடை மருத்துவர்கள் புலிக்கு மயக்க ஊசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு பரணிலும் ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு மயக்க ஊசி தயாராக உள்ளது. புலியின் பதுங்கியுள்ள இடத்தை சுற்றி கூடுதலாக 20- இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர், மசினகுடி பகுதிகளிலும் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் T23 புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை என, தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேற்று தெரிவித்தார். சிங்காரா பகுதியில் தற்போது சில இடங்களில் T23 புலியின் காலடி இருப்பதாக தகவல் வந்துள்ளது எனவும் அந்த இடத்திற்கு குழுவினர் விரைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

    Must Read : பார்த்து 3 நாள் ஆச்சு.. புலிக்கும் பசிக்கும்தானே.. வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் வனத்துறை

    4 நாட்களுக்கு முன்னர் தான் நேரடியாக புலி பார்க்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் நேரடியாக பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதர்கள், மூங்கில் புதர்கள் இருந்ததால் அப்போது மருந்து செலுத்தி பிடிக்க முடியவில்லை என்று கூறிய சேகர் குமார் நீரஜ் வனப்பகுதியில் 4 பரண்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களாகி விட்டது எனவும் புலி வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: