ஒப்பந்த ஊழியர் ஒய்வு வயதை உயர்த்தமுடியுமா? டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேட்கும் உயர்நீதிமன்றம்..

மதுரை உயர் நீதிமன்றம்

ஒப்பந்த ஊழியர்கள் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்த பரிசீலிக்குமாறு, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  மதுரையை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஓய்வு வயதையும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

  அதை ஏற்ற நீதிபதிகள், டாஸ்மாக் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்த பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்

  மேலும் படிக்க...நீட், ஜே.இ.இ தேர்வுகளை தவறவிட்ட மாணவர்கள்: மாணவர் அமைப்புகள் சார்பாக பொதுநல மனு..  ஆனால் வயது வரம்பை உயர்த்துவதை, அந்த வயது வரை தங்களுக்கு கட்டாயம் பணி வழங்க வேண்டுமென்ற உரிமையாக ஊழியர்கள் கருத முடியாது என்றும் உத்தரவிட்டனர்.
  Published by:Vaijayanthi S
  First published: