கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

மாதிரி படம்

நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர்.

 • Share this:
  கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடர்ந்திருந்தார். இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பெற்றோர் இல்லாத குழந்தைகளின் நலன் காக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

  கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா பரவல் குறையாததால் அங்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் மற்றொரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

  Also Read : முதல்வரை ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என வழக்கு - அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

  இந்த இரண்டு வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பெரும்பாலான பொது நல வழக்குகள் விளம்பரத்திற்காக மட்டுமே தாக்கல் செய்யப்படுவதாக குறிப்பிட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர். மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என குறிப்பிட்டு, அவை நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  Also Read : தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

  கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என கூறி பூமிராஜ் தொடர்ந்த இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்
  Published by:Vijay R
  First published: