சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பில் கொலை வழக்கு பதிவு செய்யலாம் - உயர் நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பில் கொலை வழக்கு பதிவு செய்யலாம் - உயர் நீதிமன்றம்
உயிரிழந்த தந்தை மகன்
  • Share this:
ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அதற்கான முகாந்திரம் உள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இரண்டு எஸ்.ஐக்கள் உள்பட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று பொதுமக்கள், எதிர்கட்சிகள் வலியுறுத்திவந்தன. இருப்பினும், இதுவரையில் கொலை வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்துவருகிறது.

இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கைவிசாரித்துவருகிறது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.


அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம். டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நடுவர் நீதிபதி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி மற்றும்
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading