கருத்துக்கணிப்புகளை நம்பலாமா? தமிழகத்தில் முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியது என்ன?

கருத்துக்கணிப்புகளை நம்பலாமா? தமிழகத்தில் முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியது என்ன?

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

2016-ல் இந்தியா டுடே - ஆக்ஸிஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 124 முதல் 140 இடங்களை பிடிக்கும் எனவும், அதிமுக 89 முதல் 101 இடங்கள் வரையே பிடிக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

  • Share this:
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை (மே2) வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியானது. இதில் பல நிறுவனங்களும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் இருப்பதாகவே தெரிவித்துள்ளன. திமுக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஆளும் கட்சி கலக்கத்தில் உள்ளது. அதே போல எதிர் கட்சியினர் தெம்புடன் காணப்படுகின்றனர்.

இருப்பினும் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்தியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி அதிகபட்சமாக 175 - 195 இடங்களை பிடித்து ஆட்சியில் அமரும் என கூறியது. அதிமுகவுக்கு 38 - 54 சீட்களே கிடைக்கும் எனவும் கூறியது.

2021 கருத்துக்கணிப்பு ஒரு பார்வை:

ரிபப்ளிக் டிவி - சிஎன்.எக்ஸ், ஏபிபி/டைம்ஸ் நவ் - சி வோட்டர், இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா அகெட், டுடேஸ் சானக்கியா - நியூஸ் 24, டிவி 9, ஷைனிங் இந்தியா நியூஸ், பாட்ரியாட்ரிக் வோட்டர், டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க், ஸ்பிக் நியூஸ் என ஏறக்குறைய அனைத்து ஊடக நிறுவனங்களுமே திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.
தி.மு.க கூட்டணி 195 தொகுதிகளில் வெற்றி பெறும் - இந்தியா டுடே கணிப்பு

கடந்த 2016 தேர்தலில் வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன கூறியது? நடந்தது என்ன? ஒரு சின்ன ரீவைண்ட் பார்த்துவிடலாம்.

2011 சட்டமன்ற தேர்தலில் 203 சீட் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, 2016 தேர்தலிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் 2016 தேர்தல் நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் திமுகவிற்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தன.

2016 கருத்துக்கணிப்பு ஒரு பார்வை:

2016-ல் இந்தியா டுடே - ஆக்ஸிஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 124 முதல் 140 இடங்களை பிடிக்கும் எனவும், அதிமுக 89 முதல் 101 இடங்கள் வரையே பிடிக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இதே போல நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ், ஏபிபி நீல்சன், என்டிடிவி போன்ற தேசிய ஊடக நிறுவனங்கள் பலவும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தது. இருப்பினும் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்பை பொய்யாக்கியது. 136 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் 2வது முறையாக ஆட்சிக்கு வந்தது. பெரும்பாலான நிறுவனங்களால் ஆட்சிக்கு வரும் என கூறப்பட்ட திமுக 98 சீட்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்; தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்!

இந்த முறை கருத்துக்கணிப்புகள் உண்மையாகுமா அல்லது முந்தைய தேர்தல் போலவே பொய்யாகுமா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள மக்களின் தீர்ப்புக்காக நாளை முடிவுகள் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டாம்.
Published by:Arun
First published: