குழந்தைகளில் கொரோனா, டெங்கு அறிகுறிகள் பிரித்தறிய முடியுமா? மருத்துவர்கள் விளக்கம்

மாதிரிப்படம்.

டெங்கு மற்றும் கொரோனா இரண்டுக்குமே குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்படும். டெங்குவில் காய்ச்சல் குறையும் போது இவை தென்பட ஆரம்பிக்கும்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலத்தில் டெங்கு பரவி வருகிறது. குழந்தைகளில் இரண்டு நோய்களுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் அதனை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கொரோனாவுக்கும் டெங்குவுக்கு முதல் கட்ட அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பதால் காய்ச்சல் உடல் வலி போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் முக்கிய அறிவுறுத்தல் ஆகும். எனினும் சில அறிகுறிகள் வேறுபடுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெங்கு மற்றும் கொரோனா இரண்டுக்குமே குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்படும். டெங்குவில் காய்ச்சல் குறையும் போது இவை தென்பட ஆரம்பிக்கும். கொசு கடித்தது போல புள்ளி புள்ளியாக சிவப்பாக தென்படும். ஆனால்  கொரோனாவாக இருந்தால் பருக்கள் மாதிரி உடல் முழுவதும் தென்படும் என்று கூறுகிறார் குழந்தை நல மருத்துவர் ரவிக்குமார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் கண், மூக்கு ஆகியவற்றில் நீர் வரும். கண்கள் சிவக்கும். டெங்கு மற்றும் கொரோனா இரண்டுக்குமே குழந்தைகளில் காய்ச்சல் ஏற்படும். டெங்குவில் மூன்றாவது நாளில் காய்ச்சல் குறைய தொடங்கும்.
இரண்டு நோய்களுக்குமே வயிறு சம்பந்தப்பட்ட அறிகுறிகள் தென்படும் என்று மருத்துவர் ரவிக்குமார் மேலும் விளக்குகிறார்.

Also read: கொரோனாவால் பெற்றோரை இழந்த 197 குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை நிதி வழங்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் ஒரே மாதிரி இருப்பதால் குழந்தைகளில் கொரோனா மற்றும் டெங்குவை பிரித்தறிவது சவாலானது என்பதால் இரண்டு நோய்களுக்குமான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் சசிதரன் கூறுகிறார்.

இரண்டு நோய்களுக்குமே காய்ச்சல், உடல் சோர்வு, வயிறு வலி போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
Published by:Esakki Raja
First published: