Home /News /tamil-nadu /

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் 500 ரூபாய் மதிப்பில் மளிகைப் பொருட்கள் - தமிழக அரசு

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் 500 ரூபாய் மதிப்பில் மளிகைப் பொருட்கள் - தமிழக அரசு

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் இந்த மளிகைப் பொருட்களை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் விற்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு 500 ரூபாய் விலையில் 19 வகையான மளிகைப் பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் இந்த மளிகைப் பொருட்களை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், ரேசன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதால் மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று நேரடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ரேசன் அட்டை இல்லாதவர்களும் ரேசன் கடைகளுக்குச் சென்று 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Lockdown, Ration card

    அடுத்த செய்தி