முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? பதிலளிக்குமாறு 4 மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? பதிலளிக்குமாறு 4 மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

கோப்புப் படம்

கோப்புப் படம்

பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசும், டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களும் பதில் அளிக்குமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா அச்சம் உள்ள சூழலில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி,டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி நெட்வொர்க் என்ற அமைப்பு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வரும் 7-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி காவல் ஆணையர் பதில் அளிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க...தீபாவளி ஷாப்பிங் செய்ய கடைவீதிகளில் குவிந்த மக்கள்.. ஜவுளிக்கடைகளில் அலைமோதிய கூட்டம்.. மறக்கப்படும் தனிமனித இடைவெளி..

அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்.. உலகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்.. அடுத்த அதிபர் யார்?

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Crackers, Delhi, Diwali, National Green Tribunal