Home /News /tamil-nadu /

வாழைப்பழத்தை சாயம் பூசி செவ்வாழையாக மாற்ற முடியுமா? நியூஸ்18 கள ஆய்வு

வாழைப்பழத்தை சாயம் பூசி செவ்வாழையாக மாற்ற முடியுமா? நியூஸ்18 கள ஆய்வு

செவ்வாழை

செவ்வாழை

  • News18
  • Last Updated :
சாதாரண வாழைப்பழத்தை சாயத்தில் ஊறவைத்து செவ்வாழை என விற்கப்படுவதாக வாட்ஸப்பில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து உண்மை நிலவரம் என்ன என்பதற்காக கோயம்பேடு பல சந்தைக்கு நியூஸ் 18 செய்திக்குழு நேரடியாக சென்றது. ஏராளமான அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்த செவ்வாழை வியாபாரிகள் காண்பித்தனர்.

செவ்வாழையின் மேல்புறத்தில் சிவப்பு நிறத்தில் இருக்கும் தோலை சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்தால் வழக்கமாகவே மஞ்சள் நிறமாக மாறும் என்று அதனை செய்து காட்டினார்கள்.

அதைப்போலவே செவ்வாழை மஞ்சள் நிறமாக மாறியது. அதேபோன்று செவ்வாழை பழமாக இல்லாமல் காய் ஒன்றை எடுத்து பிரஸ் போட்டு செய்த போது பச்சை கலரில் மாறியது.



காயாக இருக்கும் போது பச்சை வண்ணமும் பழமாக இருந்தால் மஞ்சள் நிறமும் தான் செவ்வாழையின் இயல்பான குணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

எனவே வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ மூலம் தவறான தகவலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சாயம் பூசுவது என்பது பழத்தில் செய்ய முடியாத ஒரு காரியம். எனவே யாரும் இந்த தகவலை நம்ப வேண்டாம். விருப்பமுள்ளவர்கள் செவ்வாழைப் பழத்தை வாங்கி, வீட்டில் ப்ரஸ் வைத்து தேய்த்துப் பாருங்கள், எப்போது செய்தாலும் அது மஞ்சள் நிறமாக மாறும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இந்த பொய்யான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வியாபாரிகளின் செயல்முறை காட்சிகள் இருந்தன.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Fruits

அடுத்த செய்தி