பக்ரீத்: தடையை மீறி ஒட்டகங்கள் ஏற்றி வரப்படுகிறதா? வாகனங்களைக் கண்காணிக்குமாறு உத்தரவு..

உயர்நீதிமன்ற உத்தரவின் படி, பக்ரீத் பண்டிகைக்கு ஒட்டகம் வெட்டுவதற்கு இந்தாண்டும் அனுமதி இல்லை என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பக்ரீத்: தடையை மீறி ஒட்டகங்கள் ஏற்றி வரப்படுகிறதா? வாகனங்களைக் கண்காணிக்குமாறு உத்தரவு..
பக்ரீத்
  • Share this:
இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான பக்ரீத் பண்டிகை நாளை 1-ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்கள், மற்றவர்களுக்கு இறைச்சியை பகிர்ந்து அளிப்பார்கள்.

இதற்காக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை வெட்டப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்றாலும் அவரவர் வசிக்கும் பகுதியில் எளிய முறையில் பக்ரீத் பண்டிகை நடைபெறுகிறது. இதற்காக பலரும் ஏற்கனவே ஆடுகளை வாங்கி வளர்த்து வருகிறார்கள்.

மேலும் படிக்க...11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.


இந்நிலையில், பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக ஒட்டகங்கள் வெட்டுவதை, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், 2016-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.அதனால்  காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் விடுத்துள்ள உத்தரவில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சட்டவிரோதமாக வாகனங்களில் ஒட்டகங்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading