நுகர்வோருக்கு விரிவான தகவல்களுடன் மின்சாரக் கட்டண பில் - சி.ஏ.ஜி விரிவான ஆய்வு

மின்சாரம்(மாதிரிப் படம்)

மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு விரிவான தகவல்களுடன் கூடிய பில்லை வழங்கி நுகர்வோரின் பங்களிப்பை அதிகரிகவேண்டும் என்று சி.ஏ.ஜி என்று அழைக்கப்படும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சி.ஏ.ஜி என்று அழைக்கப்படும் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன், சென்னை மற்றும் கவுன்சில் ஆன் எனர்ஜி என்விரோன்மெண்ட் அண்டு வாட்டர் டெல்லி ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து தமிழகத்தில் மின்சார கட்டண பில் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில், ‘போதுமான தகவல்களை வழங்குவதன் மூலம் மின்சாரத்துறையில் நுகர்வோர்களின் பங்களிப்பை மேம்படுத்தி, அதன் மூலம் நுகர்வோர்களின் மின்சார குறைகளை எளிதான மற்றும் விரிவாண முறையில் நிவர்த்தி செய்யக்கூடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. தமிழகத்தின் மின்சார பில் பற்றி இந்த ஆய்வின்படி நுகர்வோர்கள் மத்தியில் மின்சார பில், கட்டணம் மற்றும் கட்டணவீதம் குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல் மிகக் குறைவாக இருப்பது தெரிகிறது.

  மின்சார பில் மூலம் பல்வேறு தகவல்களை நுகர்வோருக்கு தெரிவிக்கமுடியும். மின்சாரக் கட்டணங்களைத் தாண்டி குறை தீர்க்கும் முறைகள், மின்சார சேமிப்பு, குறிப்புகள், கால் சென்டர் விவரங்கள் போன்றவை பில்லில் சேர்க்கப்பட வேண்டும். மேற்கண்ட விவரங்களை தவிர நுகர்வோர்களுக்கான பல முக்கியத் தகவல்கள் மற்றும் அவை இடம் பெறவேண்டிய விதம் போன்ற பரிந்துரைகளை இந்த ஆய்வு பட்டியலிடுகிறது. தமிழ்நாட்டின் வெள்ளை மீட்டர் அட்டை போதுமான தகவல்களை வழங்கவில்லை. ஆன்லைன் பில் இருபது சதவீத நுகர்வோர்களை மட்டுமே சென்று அடைகிறது. இந்தநிலையில் மின்சார பில்லை மறுவடிவமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் ஆய்வின் ஆசிரியர் பவித்ரா.

  நுகர்வோருக்கான விரிவான மின்சார பில்லை வகுப்பதற்கு இந்த ஆய்வு சில பரிந்துரைகள் செய்கிறது. இதில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள பில் வடிவமைப்புகளை செயல்படுத்துவதன் மூலம் நுகர்வோர்களின் புரிதலை மேம்படுத்தலாம். இது பிற்காலத்தில் வரவிருக்கும் பில்லிங் சார்ந்த அறிவியல் முன்னேற்றங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: