முகப்பு /செய்தி /தமிழ்நாடு / CAG Report : தமிழகத்தில் நதி நீர் இணைப்பு திட்டதின் தொய்வால் ஏற்பட்ட விளைவுகள் - சிஏஜி அறிக்கை

CAG Report : தமிழகத்தில் நதி நீர் இணைப்பு திட்டதின் தொய்வால் ஏற்பட்ட விளைவுகள் - சிஏஜி அறிக்கை

ஆற்று நீர்

ஆற்று நீர்

16 மாவட்டங்களுக்கு பயனளிக்கும் நதிநீர் திட்டம் முறையான திட்டமிடல் இன்றி தாமதமாக நிறைவேற்றப்படுவதால் நோக்கங்கள் நிறைவேறவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நதி நீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால் நீர் வளம் குறைந்த பகுதிகளுக்கு பாசனவசதி வழங்குதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல்நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை 2018ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தலாம் என கொள்கை வகுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள 8 நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் 2 திட்டங்களுக்கு 2008ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீதம் இருக்கும் 6 திட்டங்களான தாமிரபரணி- கருமேனி ஆறு நம்பியாறு இணைப்பு திட்டம்

காவிரி- அக்னி ஆறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு இணைப்பு திட்டம்

பெண்ணை ஆறு - பாலாறு இணைப்பு திட்டம்

வெள்ளாறு - சுவேதா நதி - போனேரி - காவிரி இணைப்பு

சோலையாறுப்பட்டி - அக்னி ஆறு இணைப்பு

தாமிரபரணி - கடானா - சித்தாறு - உப்போடை - கல்லாறு இணைப்பு திட்டம்

ஆகிய திட்டங்கள் நில ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்தல் போன்ற ஆரம்ப நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 திட்டங்களில், 3 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாகவும், மீதம் உள்ள 3 திட்டங்களும் நில ஆய்வு திட்ட வடிவமைப்பு என்ற ஆரம்ப நிலையிலேயே தான் உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் தான் தமிழக அரசு ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Must Read : மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து போராடிய போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில், 16 மாவட்டங்களுக்கு பயனளிக்கும் நதிநீர் திட்டம் முறையான திட்டமிடல் இன்றி தாமதமாக நிறைவேற்றப்படுவதால் நீர்வளம் குறைந்த பகுதிகளுக்கு பாசன வசதி வழங்குதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CAG, TN Assembly, Water management