• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAG Report : தமிழகத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் 424 கோடி ரூபாய் நஷ்டம்

CAG Report : தமிழகத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் 424 கோடி ரூபாய் நஷ்டம்

மின்சாரம் (மாதிரிப் படம்)

மின்சாரம் (மாதிரிப் படம்)

சீராய்வு செய்ய தவறியதின் விளைவாக 2016-19 ல் தவிர்த்திருக்கக்கூடிய மின் கட்டணம் மற்றும் அபராதமாக 7.07 கோடி ரூபாய் செலுத்த நேரிட்டது.

  • Share this:
    அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும், நிதி நிலை மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்தது, நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்பட்டது தான் இந்த குளறுபடிக்கும் காரணம் என மின் துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இது குறுதுத 2018ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஜி.எம்.ஆர் மின் கார்ப்பரேன் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த ஒப்ந்தம் 2014 பிப்ரவரி மாதத்துடன் முடிந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

    இதனால் 737.40 மி. யூனிட் மின்சாரத்தை, 824.77 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு யூனிட் 12.77 ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்ததை நீடிக்கக்கூடாது என தணிக்கையின் போது கூறப்பட்டுள்ளது. அப்போது சந்தை விலையில் யூனிட் 3.39 மற்றும் 5.42 ரூபாய் பெற வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய் அளவிற்கு ஜி.எம். ஆர் மின் கார்ப்பரேன் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வாங்கி உள்ளது தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    மேலும், ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மின்சாரத் தேவையை சீராய்வு செய்ய 6 அரசு மருத்துவமனைகளும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தவறியதால் 2016-2019-ல் 7.07 கோடி ரூபாய் மின் கட்டணமாக செலுத்த நேரிட்டதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து போராடிய போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் - மு.க.ஸ்டாலின்

    அதன்படி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட 6 மருத்துவமனைகளிலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச தேவையை சீராய்வு செய்ய தவறியதின் விளைவாக 2016-19இல் தவிர்த்திருக்கக்கூடிய மின் கட்டணம் மற்றும் அபராதமாக 7.07 கோடி ரூபாய் செலுத்த நேரிட்டதாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: