• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குணமடைந்த மனநல நோயாளிகள் கீழ்ப்பாக்கத்தில் நடத்தும் கஃபே

குணமடைந்த மனநல நோயாளிகள் கீழ்ப்பாக்கத்தில் நடத்தும் கஃபே

மனநல நோயாளிகள் நடத்தும் கஃபே

மனநல நோயாளிகள் நடத்தும் கஃபே

இந்த கஃபே மூலம் கிடைக்கும் லாபம் மருத்துவமனைக்கே வழங்கப்படும்.

  • Share this:
கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்திலிருந்து குணமடைந்த மனநல நோயாளிகள் நடத்தும் கஃபே (cafe) தொடங்கப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்திலேயே கீழ்ப்பாக்கம் பிரதான சாலையின் மீது அமைந்திருக்கும் இந்த கஃபேவில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் மருத்துவமனையிலிருந்து பணி செய்கின்றனர்.

ஹாட் பிரெட்ஸ் (Hot Breads) நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு பணி செய்யும் ஜெயா ஐந்து ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்ததாகவும் தற்போயு தனக்கு  வருமானம் ஈட்டிக் கொள்ள இந்த கஃபே வழி செய்துள்ளதாகவும் கூறுகிறார்.

குணமடைந்த நோயாளிகள் சமூகத்தில் அங்கீகாரத்துடன் சொந்த காலில் நிற்பதற்கு உதவியாக இருக்கும் என அரசு மனநல காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா கூறுகிறார்.

Must Read : குடிநீர், பேருந்து, ரேஷன் கடை, பள்ளி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அகதிகள் போல் வாழும் கிராமம்

மேலும், பணியாளர்களுக்கு சம்பளம் தருவதோடு மட்டுமல்லாமல் இந்த கஃபே மூலம் கிடைக்கும் லாபம் மருத்துவமனைக்கே வழங்கப்படும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: