• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Sasikala: சசிகலா வீடு முன் அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள்!

Sasikala: சசிகலா வீடு முன் அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள்!

சசிகலா

சசிகலா

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து  காலை 10.30 மணியளவில் சசிகலா புறப்பட்டு மெரினா செல்கிறார். இதையொட்டி காலையில் இருந்து அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

  • Share this:
    மெரினாவில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கு சென்று வி.கே.சசிகலா இன்று  மரியாதை செலுத்தவுள்ளார். இதற்காக அவரது வீட்டு  முன்பு அதிமுக கொடியுடன் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வியை அடுத்து அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.  தொண்டர்களிடமும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார்.

    அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி சனிக்கிழமையன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தவுள்ளார்.  சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து  காலை 10.30 மணியளவில் சசிகலா புறப்பட்டு மெரினா செல்கிறார்.

    இதற்காக அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் இல்லம் முன்பு காலையில் இருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். ஒருசிலர் கையில் அதிமுக கொடிகளை ஏந்தியப்படியும் வாசலில் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: பொதுச்செயலாளர் முதல் சபதம் வரை.. அதிமுக-வை வசப்படுத்துவாரா சசிகலா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: