முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.. இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க திட்டம்..

முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.. இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க திட்டம்..

மாதிரிப் படம்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கும் நோக்கில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 • Share this:
  கடந்த 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதையடுத்து, தொடர்ந்து 4 நாட்கள் பேவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் பேரவையை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். ஆளும் அதிமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி வருகின்ற மே மாதம் நிறைவடைய உள்ளது. இதனால், இந்து ஆண்டு இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

  மேலும் படிக்க...200 தொகுதிகளில் திமுக வெற்றி சாத்தியமா? கனிமொழி

  தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், துறை ரீதியான புதிய திட்டங்கள், ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை, தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: