• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் எப்போது? இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் எப்போது? இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    தமிழக அரசின் 2021 - 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

    கடந்த அதிமுக ஆட்சியில் பிப்ரவரி மாதம் தேர்தலை முன்னிட்டு, இடைக்கால நிதி நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முழு நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இதற்கு துறைரீதியான ஆய்வுக் கூட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.

    திமுக, அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன், பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில், தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    Must Read : குடும்ப தலைவிக்கு ரூ.1000: மக்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சர்

    இந்தக் கூட்டத்தில், நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், தமிழக பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், வரும் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ளதால் அது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: