Home /News /tamil-nadu /

முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

  • News18
  • Last Updated :
    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

    அடுத்த நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் மார்ச் மாத முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும், புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் அமைச்சரவை கலந்தாலோசிக்கப்படும் என தெரிகிறது.

    மேலும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, நிலங்கள், மானியங்கள் வழங்குவது பற்றி விவாதிக்கப்படக் கூடும். அத்துடன், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என தெரிகிறது.

    Also see...


    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CM Edappadi Palaniswami, TN Cabinet, TN Govt

    அடுத்த செய்தி