சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்புமில்லை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

  • Share this:
குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு  எவ்வித பாதிப்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். பிற மாநிலங்களில் சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக சட்டப்பேரவையில் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு  பதிலளித்த முதல்வர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படவில்லை என்றார்.  ஒரு சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள் அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம் என ஆவேசமாக முதலமைச்சர் பதிலளித்தார். மேலும்,  தவறான தகவல்கள் பரப்பட்டு தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

குடியுரிமைச் திருத்தச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; மாநில அரசு இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது  என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.

Also see:
Published by:Rizwan
First published: