கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம் தளி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த வழிகாட்டுதல் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.மகேந்திரன்,
இஸ்ரேல் ஸ்பை வேர் என்று சொல்லுகிறார்களே கணினி மென்பொருள் மூலமாக அடுத்தவருடைய வாழ்வை ரகசியமாக கண்காணிக்கும் செயலிலே இந்திய அரசு ஈடுபட்டு வந்தது அதை உச்சநீதிமன்றம் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தனி மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற வழிகாட்டுதல் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது இது வரலாற்று சிறப்பு மிகுந்தது வரவேற்கக்கூடியது.
உச்சநீதிமன்ற சிறந்த வழிகாட்டுதல் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது இது பாரதிய ஜனதா கட்சி அவர்களுடைய எதிர் அரசியல் கட்சிகளை வேவு பார்க்கக் கூடிய இந்த மோசடி தளத்திற்கும் ஒரு சரியான பதிலடி. 41முக்கியமான இடங்களில் பல்வேறு ராணுவ பாகங்களில் உற்பத்தி செய்தார்கள் அதையெல்லாம் நான்காக இணைத்து உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது கண்டனத்திற்கு உரியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்த இருக்கின்றோம். உலக அளவில் பெட்ரோலை வைத்துக்கொண்டு ஒரு மோசடியான செயல்பாட்டை நடத்திக் கொண்டிருக்க கூடிய ஒரு ஆட்சி என்றால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான்.
உலகத்தில் பெட்ரோல் விலை இங்குதான் கூடுதலாக இருக்கு வேற எந்த நாட்டையும் விட நம்மை விட வறுமையில் வாழக்கூடிய நாடுகளாகிய பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, எல்லா இடத்திலும் பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
Must Read : டயர் பற்றாக்குறையால் தீபாவளிக்கு பேருந்து சேவை பாதிக்குமா? - கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கம்
இந்தப் பேட்டியின் போது தளி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் லகுமைய்யா உடனிருந்தனர்.
பேட்டி: சி.மகேந்திரன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்
செய்தியாளர் - செல்வா, ஓசூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPI, Petrol, Supreme court