• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 4 தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

4 தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

File Picture

File Picture

வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளதால் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் நடைபெற்றது. எஞ்சியிருந்த அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது பரிசீலனை முடிந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வளாகத்தில் உள்ள தகவல் பலகையிலும் வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படும். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளதால் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Also see... சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எப்படி சாத்தியம்?

Also see... அரசுக்கு ஆதரவளிக்க 40 திமுக எம்.எல்.ஏக்கள் தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: