4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையர்கள் உறுதி

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் தேர்தல் ஆணையரான அசோக் லவசா கூறியுள்ளார்.

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையர்கள் உறுதி
தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: April 5, 2019, 8:47 AM IST
  • Share this:
ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர்கள் உறுதியளித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, தேர்தல் ஆணையர்கள், சுசில் சந்திரா, அசோக் லவசா மற்றும் இயக்குநர்கள் திலீப் சர்மா, ஓஜா ஆகியோர் தமிழகம் வந்தனர்.


சென்னையில் அங்கீரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய நிலையில், வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். தலைமை தேர்தல் ஆணையர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ-வும் உடன் இருந்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தேர்தல் ஆணையர் அசோக் லவசா, பணப்பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனையை அதிகரிக்கவும், மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.மேலும், பட்டுவாடாவுக்காக பணம் எடுத்துச்செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாவும் அசோக் லவசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அசோக் லவசா தெரிவித்தார். BSNL விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் வருவது, நமோ டிவி விளம்பரங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குக்கர் சின்னம் அளித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை எனவும், சட்டப்படிதான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின், தமிழகத்தில் மட்டும் இதுவரை 127 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அசோக் லவசா உறுதியளித்துள்ளார்.

Also see... தமிழ்தான் நாட்டின் பழமையான மொழி


Also Read...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also Read...
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading