4 தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Vaijayanthi S | news18
Updated: May 17, 2019, 11:45 AM IST
4 தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
Vaijayanthi S | news18
Updated: May 17, 2019, 11:45 AM IST
தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், ஆட்சிக்கு வருவதற்கு தாம் அலையவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியை மக்களே விரும்பவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

தமிழகம், புதுச்சேரியில் வேலூர் தொகுதியைத் தவிர 39 நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல, 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரம்:

திருப்பரங்குன்றம் தொகுதியில். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று பரப்புரை செய்கின்றனர். அதேபோல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று நாள் முழுவதும் பரப்புரை மேற்கொள்கிறார்.

முன்னதாக, சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், 22 தொகுதிகளிலும் வென்று திமுக பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்றார். தான் ஆட்சிக்கு வருவதற்கு அலைவதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், ஆட்சிக்கு வருவதற்கு தாம் அலையவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமியை மக்களே விரும்பவில்லை என்றும் காட்டமாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு விருது வழங்கியவர்களை, அடித்து உதைக்க வேண்டும் எனவும் விமர்சித்தார்.
Loading...
பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்

திமுகவின் சூழ்ச்சி காரணமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில், எட்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்த அன்புமணி ராமதாஸ், தேவையில்லாமல் இப்பகுதியில் வன்முறை நிகழ்ந்தது போல திமுகவினர் சித்தரித்ததாக குற்றம்சாட்டினார்.

பிரேமலதா விஜயகாந்த் 

இடைத்தேர்தலுக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டையில், அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பேசிய அவர், திமுக, அமமுகவை கடுமையாக விமர்சித்தார். உண்மையான ஸ்லீப்பர் செல் டிடிவி.தினகரன் எனவும், மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்

இதேபோல், ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பரப்புரை செய்த சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், மு.க.ஸ்டாலினுக்கு பதவி மோகம் இருப்பதாக விமர்சித்தார்.

உதயநிதி ஸ்டாலின்

ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு இல்லை என பேசினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகேயுள்ள செஞ்சேரிமலை பகுதியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரப்புரை செய்தார். முன்னதாக சாலை விபத்தில் சிக்கியவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக, அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Also see... சசிகலா மீது இன்றும் எங்களுக்கு மரியாதை உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626