Home /News /tamil-nadu /

சட்டப்பேரவையில் யாருக்கு பலம் அதிகம்: திமுக VS அதிமுக

சட்டப்பேரவையில் யாருக்கு பலம் அதிகம்: திமுக VS அதிமுக

திமுக- அதிமுக

திமுக- அதிமுக

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 3 கூட்டணி கட்சியினரின் ஆதரவை பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால், அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குறைந்தபட்சம் 4  தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போது 22 தொகுதிகள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, தற்போதுள்ள 212 எம்.எல்.ஏ.க்களில் பாதியளவான 106 உறுப்பினர்களுக்கு மேற்பட்டோரின் ஆதரவோடு அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், சபாநாயகரை சேர்க்காமல் அதிமுகவின் உறுப்பினர்கள் பலம் 113 ஆக உள்ளது.

இவர்களில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் தங்களது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகின்றனர். இந்த 6 பேரை கணக்கில் கொள்ளாமல் பார்த்தால் அதிமுகவின் பலம் 107 ஆக உள்ளது.

எனவே, 22 தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர், எவ்வித சிக்கலுமின்றி அதிமுக ஆட்சி தொடர வேண்டுமென்றால், 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. எனினும், 4 தொகுதிகளில் வென்றால், அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை சரிகட்டி ஆட்சியை தொடர முடியும்.

அதேநேரத்தில் அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது, திமுகவில் 88 உறுப்பினர்களும், காங்கிரசில் 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஒருவரும் என திமுக கூட்டணியின் பலம் 97 ஆக உள்ளது. இது தவிர சுயேட்சையாக தினகரன் உள்ளார். எனவே எதிர்க்கட்சிகளின் பலம் 98 ஆக உள்ளது.

இந்நிலையில், 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 19 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க முடியும். இதனால், மே 23-ம் தேதி 22 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகும் போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடருமா அல்லது ஆட்சி மாற்றம் நிகழுமா என்பது தெரிந்துவிடும்.

Also see... அதிமுக - பாஜக கூட்டணி, வாக்கு கேட்டு வரவேண்டாம் - திருப்பூரில் போஸ்டர்களில் பரபரப்பு

Also see... வாக்கு சேகரிக்கும் இடத்தில் மீன் வியாபாரியாக மாறிய மன்சூர் அலிகான்


Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, DMK, Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Tamilnadu by election

அடுத்த செய்தி