ரேஷன் கடைகளில் சோப்பு, உப்பு, டீ தூள் உள்ளிட்ட பொது விநியோக திட்டத்தினை சாராத பொருட்களை கட்டாயப்படுத்தி விநியோகிக்க கூடாது என்று உணவுப்பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை கடைக்கு அனுப்பி பொருட்களை பெறும் வகையில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த உத்தரவை நியாய விலைக்கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என தொடர்ந்து புகார் வந்துள்ளதாகவும், இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாய விலை கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read : சென்னை வெள்ளம் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
மேலும் நியாய விலை கடையின் செயல்பாட்டுக்கென லாப நோக்குடன் இருப்பில் வைத்து விநியோகிக்கப்படும் பொது விநியோக திட்டத்தினை சாராத கட்டுப்பாடற்ற பொருட்கள் எக்காரணத்தை கொண்டும் கட்டாய விநியோகம் செய்ய கூடாது. அப்பொருட்கள் அட்டைதாரர் தாமாக முன்வந்து பெற சம்மதிக்கையில் அதனை விநியோகிக்கும் போது அவற்றுக்கென தனியே கடை நடத்தும் நிறுவனத்தின் முறையான அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும். ஏனெனில் இக்கட்டுப்பாடற்ற பொருட்கள் பொது விநியோக திட்டத்தில் அடங்காது என்ற நிலையில் அவற்றை மென்பொருள்படி பொது விநியோகத்தின் குறுஞ்செய்தியில் இணைக்க வழிவகை இல்லை.
Also Read : பொன்விழா நாயகன் : சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய துரைமுருகன்
மேற்கண்ட அறிவுரைகள் தவறாது பின்பற்றப்படுவதனை நியாய விலை கடைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்துக் கொள்ள வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற புகார்கள் வெளிவராவண்ணம் அனைத்து நியாய விலை கடைகளும் உயர்தரத்தில் முறையான சேவையினை வழங்குவதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.