Home /News /tamil-nadu /

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு… உத்தரவு பிறப்பிக்கப்டும் தேதி அறிவிப்பு

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு… உத்தரவு பிறப்பிக்கப்டும் தேதி அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும்படி வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார்ப்படுத்தி தான் ஆக வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு

இந்த பின்னணியில், இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? - ராகுல் காந்திக்கு நடிகை குஷ்பு கேள்வி!

அப்போது, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எப்படி அமல்படுத்தலாம் என்பது குறித்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், அவற்றை பரிசீலித்து அறிக்கை அளிப்பதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்று, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
Published by:Musthak
First published:

Tags: Chennai High court, Tasmac

அடுத்த செய்தி