முகப்பு /செய்தி /தமிழ்நாடு / யூடியூப் பார்த்து செயின் பறிப்பு.. அடிக்கடி மாற்றப்பட்ட சட்டை.. வசமாய் சிக்கிய ஹெல்மெட் கொள்ளையர்கள்..!

யூடியூப் பார்த்து செயின் பறிப்பு.. அடிக்கடி மாற்றப்பட்ட சட்டை.. வசமாய் சிக்கிய ஹெல்மெட் கொள்ளையர்கள்..!

செயின் திருட்டு கைது

செயின் திருட்டு கைது

யூடியூப்பை பார்த்து கற்றுக் கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் முதல் முயற்சியிலேயே காவலர்களிடம் சிக்கிக் கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ராதா என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நெற்குன்றத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் நொளம்பூரைச் சேர்ந்த தமிழன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் இருக்க பல உத்திகளை கடைபிடித்ததாக கூறியுள்ளனர்.

செயின் பறிப்பில் ஈடுபடுவதற்கு முன்பு, வீட்டில் இருந்து புறப்பட்டு மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் பகுதிகளில், பல்வேறு தெருக்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சுற்றியுள்ளனர். அப்போது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது வெவ்வேறு நிறத்தில் சட்டைகளை மாற்றியுள்ளனர்.

இதேபோல, வாகனங்களின் நம்பர் பிளேட்டையும் மாற்றியுள்ளனர். காவல்துறையினர் எதைவைத்து துப்பு துலக்குவர் என்பதை யூடியூப்பில் பார்த்து கற்றுக்கொண்டதாக கூறும் இளைஞர்கள், மது குடிப்பதற்காக, முதல் முறையாக வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Chennai, Crime News, Theft