Home /News /tamil-nadu /

இறைச்சி கடையில் நூலகம் - வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் இளைஞர்

இறைச்சி கடையில் நூலகம் - வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் இளைஞர்

சிக்கன் கடையில் மினி நூலகம்

சிக்கன் கடையில் மினி நூலகம்

Thiruvallur : திருவள்ளூர் அருகே கஞ்சா போதையால் அடிமையாகும் இளைஞர்களை நல்வழிப்படுத்த சிக்கன் கடையில் நூலகம் அமைத்த இளைஞரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    புத்தக வாசிப்பாளர்களை அதிகப்படுத்த பல இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்துப்படுகின்றன. பல இடங்களில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்காக தனது இறைச்சி கடையில் பிரத்யேக புத்தக ஸ்டால் அமைத்து புது முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஓர் இளைஞர்...

    திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்ற கார்த்திக்குக்கு சிறுவயது முதலே புத்தக வாசிப்பில் அதிக நாட்டம் உண்டு. பல்வேறு பணிகளுக்குச் சென்றாலும் அதில் திருப்தி இல்லாமல் பாதியில் நின்றுவிட்ட கார்த்தி, தந்தை இல்லாத தன் குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க முடியாததை எண்ணி வருந்தினார். குடும்பம் வறுமையால் கார்த்திக் சோகத்தில் இருப்பதை கண்டு வேதனை அடைந்த அவரது நண்பர்கள், ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தோழன் சிக்கன் கடை என்ற இறைச்சிக் கடையை அமைத்து தந்தனர்.

    Also Read: தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

     

    நண்பர்கள் செய்த உதவியை நன்றியோடு நினைத்து பார்க்கும் கார்த்திக், கடையை லாபகரமாக நடத்த தீவிரம் காட்டினார். கடையிலேயே நாள் முழுவதும் இருக்க வேண்டியிருந்ததால் அவரால் புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது. அதனால் வீட்டிலிருந்த புத்தகங்களை தனது கடைக்கு கொண்டு வந்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து வந்தார்.

    கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இறைச்சி வாங்கி செல்லும் நேரத்தில் காத்திருப்பதை பார்த்து, அந்த நேரத்தை அவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற நினைத்தார் கார்த்திக்குக்கு புதிய திட்டம் உதித்தது. கடையில் தான் மட்டும் படிக்க வைத்திருந்த புத்தகங்களை எடுத்து பொதுவாக வைத்தார். கடைக்கு வரும் எவரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம், கிடைக்கும் நேரத்தில் புத்தகங்களை புரட்டிப் பாருங்கள் என வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

     

    மினி நூலகம்


    கறிக்கடையில் உள்ள குட்டி நூலகத்தை வாடிக்கையாளர்கள் முதலில் வியப்புடன் நோக்கியபோதும் கார்த்திக்கின் புது முயற்சியை வெகுவாக பாராட்டினர். புத்தகங்களைப் புரட்டி சிந்தனை ஓட்டத்தைத் தட்டிவிடும் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களையும் கார்த்திக்கிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். இதுபோன்ற விவாதங்கள் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் கார்த்திக்

     

    செய்தியாளர் - பார்த்தசாரதி
    Published by:Suresh V
    First published:

    Tags: Cannabis, Drug addiction, Thiruvallur, Youths

    அடுத்த செய்தி