• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • மாயமான தொழிலதிபர்.. திசை மாறிய வழக்கு.. கோடியில் கொள்ளை - பாமக பிரமுகர் கொலை நடந்தது எப்படி?

மாயமான தொழிலதிபர்.. திசை மாறிய வழக்கு.. கோடியில் கொள்ளை - பாமக பிரமுகர் கொலை நடந்தது எப்படி?

கொலையுண்ட தம்பதி

கொலையுண்ட தம்பதி

சஞ்சீவி ரெட்டியின் மைத்துனர் மகன் ராபர்ட் என்கிற ரஞ்சித், அவர்கள் இருவரையும் கடந்த 29ம் தேதி அழைத்துக் கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது

 • Share this:
  திருத்தணியில் பாமக பிரமுகர், அவரது மனைவியுடன் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  திருத்தணி, பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் 68 வயதான சஞ்சீவி ரெட்டி. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.பாமக பிரமுகரான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவி சரஸ்வதி உயிரிழந்தநிலையில், மாலா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார்.சஞ்சீவி ரெட்டி முதல் மனைவிக்கு 45 வயதில் ஜோதி என்ற மகளும், 42 வயதில் ஜெயகாந்தன் என்ற மகனும் உள்ளனர்.மகள் ஜோதி உயிரிழந்த நிலையில் இகன் ஜெயகாந்தன் வெளியூரில் வசித்து வருகிறார்.இதனால் சஞ்சீவி ரெட்டி தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

  Also Read:  உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. உற்சாகத்துடன் சென்ற பேப்பர் ஏஜெண்ட்- கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

  இந்நிலையில் சஞ்சீவி ரெட்டியும் அவருடைய மனைவி மாலாவையும் கடந்த 29 தேதி முதல் காணவில்லை என அவரது தம்பி பாலு என்பவர் திருவள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 நாட்களாகத் தேடியும் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை. சஞ்சீவி ரெட்டி திருத்தணியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். சீட்டு பிடிப்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது என கடந்த 30 ஆண்டுகளாக தொழில் செய்து வந்துள்ளார்.தொழில் போட்டி காரணமாக இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

  இதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.சஞ்சீவி ரெட்டி வீட்டின் கதவை உடைத்து சோதனை மேற்கொண்ட போலீசார் பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளைடிக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

  Also Read:  மீன் குழம்பால் வந்த தகராறு.. தூக்கில் தொங்கிய கணவர் - குடும்பத்தினர் அதிர்ச்சி

  விசாரணையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 சவரன் நகை, 50 லட்சம் பணம் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை கணக்கிட்டு உறுதி செய்தனர்.நகை, பணத்திற்காக சஞ்சீவிரெட்டியும் அவரது மனைவியும் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  அதில் சஞ்சீவி ரெட்டியின் மைத்துனர் மகன் ராபர்ட் என்கிற ரஞ்சித், அவர்கள் இருவரையும் கடந்த 29ம் தேதி அழைத்துக் கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது.சாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்த போலீசார், சொகுசு காரில் இருவரையும் கடத்திக் கொண்டு ஆந்திரமாநிலத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

  ரஞ்சித்துக்கு மாமா, அத்தை முறையான சஞ்சிவி ரெட்டியையும் அவரது மனைவியையும் , சம்பவத்தன்று ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள அப்பலகுண்டா பெருமாள் கோயிலுக்கு கூட்டிச் சென்றுள்ளார்.அவருடன் அவரது கூட்டாளிகளான விமல்ராஜ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் மற்றொரு காரில் சென்றுள்ளனர்.

  Also Read:  சாவில் இணைந்த காதலர்கள்.. காதல் ஜோடியின் திருமண கனவு கல்லறையில் நிறைவேறியது..

  ராமச்சந்திராபுரம் காட்டுப்பகுதி வழியாக கார் சென்ற போது ஆள்அரவமற்ற பகுதியில் காரை நிறுத்தி சஞ்சீவி ரெட்டியையும், அவரது மனைவி மாலாவையும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.இதையடுத்து காட்டுப்பகுதியில் இருவரது உடலையும் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.அதன்பிறகு சஞ்சீவி ரெட்டியின் வீட்டுக்கு வந்து பீரோவை உடைத்து நகை, பணம், ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம் புத்தூர் கார்வேட்நகர் செல்லும் சாலையில் சஞ்சீவிரெட்டியும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.இருவர் உடலையும் தோண்டி எடுத்த போலீசார் திருப்பதி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  சஞ்சீவி ரெட்டியின் சொகுசுகாரும், கடத்தலுக்கு பயன்படத்தப்பட்ட 2 சொகுசுக்கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்துக்காக சொந்த அத்தை, மாமாவை மருமகனே கொலை செய்த சம்பவம் திருத்தணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: