நட்சத்திர ஒட்டலில் கூடுதல் ஏ.டி.ஜி.பி கொடுத்த மதுவிருந்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் மதுபோதையில் எஸ்கலேட்டரில் தடுக்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் புதன்கிழமை இரவு கூடுதல் ஏ.டி.ஜி.பி சந்திப் ராய் ரத்தோர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பாந்தியன் குடியிருப்பில் வசித்து வந்த 72 வயதான தொழிலதிபர் ரமேஷ் ஜெய் துலானி மற்றும் 76 வயதான மிர்துன் ஜெய்சிங் இருவரும் ஏடிஜிபியின் விருந்தில் பங்கேற்றனர். மது விருந்து முடிந்த பின், போதையில் எஸ்கலேட்டரில் தள்ளாடியபடி கீழே இறங்க முற்பட்டுள்ளனர்.
அப்போது இருவரும் தடுமாறி கீழே விழுந்த நிலையில் தலையில் அடிபட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல் பணியாளர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனையில் ரமேஷ் ஜெய் துலானி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மற்றொரு முதியவர் மிர்துன் ஜெய்சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கிண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பார்க்க...மதுரையில் புழங்கும் கள்ள நோட்டுக்கள்..
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.