ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை: பேருந்துநிலையத்திலேயே நிற்கும் பேருந்துகள்

ஓட்டுநர், நடத்துநர் இல்லாமல் 10-க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்படாமல் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை: பேருந்துநிலையத்திலேயே நிற்கும் பேருந்துகள்
பேருந்து நிலையத்திலேயே நிற்கும் அரசு நகர பேருந்துகள்
  • Share this:
ஓட்டுநர், நடத்துநர் இல்லாமல் 10-க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்படாமல் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனை மூலம் 33 நகர பேருந்துகள், 36 புறநகர் பேருந்துகள் என, 69 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்புத்தூர் பணிமனை மூலம் 17 நகர பேருந்துகள், 24 புறநகர் பேருந்துகள் என, 41 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து நிலையத்திலேயே நிற்கும் அரசு நகர பேருந்துகள்தேவகோட்டை பணிமனை மூலம் 26 நகர பேருந்துகள், 42 புறநகர் பேருந்துகள் என, 68 இயக்கப்படுகின்றது. திருப்புவனம் பணிமனை மூலம் 44 நகர பேருந்துகளும், காரைக்குடி பணிமனை மூலம் 24 நகர பேருந்துகள், 47 புறநகர் பேருந்துகள் என 71-பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சிவகங்கை மாவட்டத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் ஒவ்வொரு பணிமனைக்கும் குறைந்தது 10 பணியிடங்களாவது காலியாக உள்ளது.

பேருந்து நிலையத்திலேயே நிற்கும் அரசு நகர பேருந்துகள்
இதனால் கிராமங்களுக்கான நகர பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படாமல் பேருந்துநிலையங்களிலேயே நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வேப்பங்குளம், திருமயம், புளியங்குடி, கடியாபட்டி, தேவகோட்டை, ஏம்பல் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு செல்லக் கூடிய நகர பேருந்துகள் ஓட்டுநர், நடத்துநர் இல்லாததால் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறுகையில், ‘ஆட்கள் பற்றாக்குறையால் நகர பேருந்துகளுக்குரிய ஓட்டுநர், நடத்துநர்களை புறநகர் பேருந்துகளுக்கு மாற்றுகின்றனர். இதனால் சில ஷிப்டுகள் நகர பேருந்துகளை இயக்க முடியவில்லை. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே இப்பிரச்சினை தீர்க்க முடியும் என்று கூறினார்.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading