பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து முன்பதிவு இன்று முதல் துவக்கம்...!

பேருந்து சேவை

பேருந்தில் 100% பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது.  ஜனவரி மாதம் 11-ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். இதனால் பெரும்பாலான மக்கள் பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்ல அரசு பேருந்தில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக  ஜனவரி மாதம் 14-ம் தேதி போகி பண்டிகை , 15-ம் தேதி தைப் பொங்கல், 16-ம் தேதி திருவள்ளூவர் தினம், 17-ம் தேதி உழவர் தினம் வருகிறது.

தமிழகத்தில் 300 கி.மீ தூரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூரு, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அடுத்தமாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.www.tnstc.in இணையதளம் மட்டுமல்லாமல், www.redbus.in. www.busindia.com, www.makemytrip.com ஆகிய இணையதளங்கள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Also read... தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டம்...!பொங்கல் பண்டிகைக்கு பயணம் செய்ய தற்போது சிலர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். கோரோனோ படிப்படியாக குறைந்து வருவதால் 100% இருக்கையில் அமரலாம் என அரசு கூறியுள்ளது எனவே அடுத்த 2 வாரங்களுக்கு பிறகு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

அதேபோல ஜனவரி11 முதல் 20ம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்குவதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறினர்
Published by:Vinothini Aandisamy
First published: